பாடுமீன்களின் சமரில்,மட்டக்களப்பு வின்சென்ட்பெண்கள் உயர்தர தேசியபாடசாலை, சம்பியனானது

0
102

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அணிக்கும், வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை அணிக்கும் இடையிலான, பாடுமீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் துடுப்பாட்டப் போட்டி இன்று நடைபெற்றது.
நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த, புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அணி, 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில், 6 இலக்குகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை அணி 4 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை
அடைந்தது.
மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் அனுசரணையில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து
போட்டிகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.
பரிசளிப்பு நிகழ்வில் கிழக்குமாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பாடசாலைக்கு, கிண்ணத்தை வழங்கினார்.
அதிதிகளாக கல்வித் திணைக்கள அதிகாரிகள் ,பாடசாலைகளின் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்