22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை வீரர் யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். அவர் தனது தூரத்தை 10.14 வினாடிகளில் ஓடி முடித்து பதக்கம் வென்றுள்ளார். அந்த வகையில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இலங்கை வீரர் என்ற சாதனையையும் யுபுன் அபேகோன் ஏற்படுத்தியுள்ளார். இதேவேளை, பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான தட்டெறிதல் பரா போட்டியில் இலங்கையின் பாலித கல்காவெல கெதர வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.