பொலன்னறுவை, சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுகெலே பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிபுர பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பொலன்னறுவை, களுகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு அருகில் அலங்கார மீன் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் மீன் தொட்டிகளைக் காட்டு யானைகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகச் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின் கம்பிகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.