மட்டக்களப்பில், சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கைகள் தொடர்பில், தெளிவூட்டும் செயலமர்வு

0
58

மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கைகள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு, விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக
அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து, செயலமர்வை ஏற்பாடு செய்தன. தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் 1998ம் ஆண்டு 50 இலக்க சட்டவரைவு மற்றும் சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளை அமுல்ப்படுத்துவதற்று அமைச்சுக்களின் கடப்பாடு மற்றும் சிறுவர் பாதுகாப்பு கொள்கையினை ஐந்து வருட திட்டத்தினுள் உள்வாங்குதல் தொடர்பாக
தெளிவூபடுத்தப்பட்டது.
கிராம சேவையாளர் நிர்வாக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் மற்றும் உளவள ஆசிரியர் ஆலோசகர்கள் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.