இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மருத்துவ பிரிவுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்ற நோய் பிரிவு இணைந்து,
மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு, தொற்றா நோய்கள் தொடர்பான, மருத்துவ முகாமொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தன.
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்ற நோய் பிரிவு வைத்தியர் உதயகுமார் ஒருங்கிணைத்திருந்தார். சுமார் 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதில் பங்கெடுத்தனர்.
தொற்றா நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கொன்றும் இன்று வைத்தியர் ரதி ஜெயரூபன நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெகத் விசாந்த, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மருத்துவ சேவை பிரிவு வைத்தியர் பவுனு ஆராய்ச்சி மற்றும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் மருத்துவ பிரிவு வைத்தியர்கள், பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்