மட்டக்களப்பு கரடியனாறு பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காவலாளர் தாக்கப்பட்டதை கண்டித்தும், நீதிகோரியும் கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் காவலாளி ஒருவர் மதுபோதையிலிருந்தவர்களினால் வாள்வெட்டுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு முன்பாக கரடியனாறு பொலிஸ் நிலையம் உள்ள போதிலும் குறித்த சம்பவம் நடைபெற்று இரண்டு தினங்கள் கடந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அரச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பு வேண்டும், அரச தொழிலுக்கு இடையூறு விளைவிக்காதே,பாதிக்கப்பட்ட காவலாளிக்கு நீதியைப் பெற்றுக்கொடு, குற்றவாளிகளை கைதுசெய் போன்ற பல்வேறு கோரிக்கைகள்
அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்ததுடன் பாதிக்கப்பட்டவருக்கு நீதி மற்றும் நஸ்டஈட்டினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் பல்வேறான கோசங்கள்எழுப்பப்பட்டன.