மட்டக்களப்பு காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை இன்று எதிர் கட்சி தலைவரால் திறந்து வைக்கப்பட்டது.
ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்த பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்துரையாடினார்.
ஆங்கில நூல்களை வாங்குவதற்காக பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியும் சஜித் பிரதேதாஸவால் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான கணேசமூர்த்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் முஸ்தபா, காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி ஹக்கீம்,
பாடசாலை அதிபர் ரிப்கான் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.