30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு பாலர்சேனையில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதி கையளிப்பு

சப்பிரிகமக் தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு பாலர்சேனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதி மக்களது பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

சுந்தரலிங்கம் சுந்தரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்தகொண்டதுடன் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும்; பங்கேற்றனர்.

கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள இவ்வீதி பல தசாப்தகாலமாக புனமைக்கப்படாது மணல் பாதையாக காணப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து இவ்வீதிக்கு ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு புனமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles