மட்டக்களப்பு மத்தி கல்வி வலையத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள மட்டக்களப்பு பூநொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தில் உயர் தரப் பிரிவுக்கான, கலைப்பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கலை பிரிவினை முதல் தடவையாக ஆரம்பிக்கும் வைபவம் இன்று பாடசாலையின் அதிபர் ஏ.பி .ஏ .ரசூல் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம.அமீர், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எஸ்.உமர் மௌலானா,
காத்தான்குடி கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.