26.2 C
Colombo
Sunday, May 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் சாதனை

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் இம்முறை கா.பொ.த சாதாரண தரத்தில் சாதனை படைப்பதற்கு வலய கல்வி பணிமனையின் சிறந்த திட்டமிடலுடனான செயற்பாடே காரணம் என அதிபர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வலய கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமாரை சந்தித்த மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்கள் தேசியமட்டத்தில்மட்டக்களப்புகல்விவலயம்முதல்இடத்தினைப்பெற்றுக்கொண்டதற்காக வலய கல்வி பணிப்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சுகுணன் கலந்துகொண்டார்.இதன்போது மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளருக்கு மாலை அணிவித்து தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதுடன் ஊடக சந்திப்பொன்றிலும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தனர்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அதிபர் ஆர்.பாஸ்கர், கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலய அதிபர் சாமித்தம்பி மதிசுதன்,ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் ஆகியோர் இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இதேநேரம் வலய கல்வி அலுவலகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் சிறந்த முறையில் கற்றல் செயற்பாடுகளை முன்கொண்டு சென்றதன் காரணமாக இந்த வெற்றியை பெறமுடிந்ததாக மட்டக்களப்பு வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்வி பணிப்பாளர் தேவரஜனி உதயகரன் தெரிவித்தார்..

கடந்த வருடம் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 109மாணவர்கள் 09 ஏ சித்திகளைப்பெற்றிருந்த நிலையில் 2021ஆம் ஆண்டில் தோற்றிய மாணவர்கள் 128 பேர் 09 ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles