26.9 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.ஜெயந்திபுரம் கிராம செயலாளர் பிரிவில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 48 கிராம சேவையாளர் பிரிவுகளில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்றும் மற்றும் தொற்றாநோய்த் தாக்கங்களிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையுடன் இளம் வயதில் ஏற்படும் மரண வீதத்தை எதிர்காலங்களில் கட்டுப்படுத்தும் வகையில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் முன்னோடித் திட்டமாக இன்றைய தினம் மட்டக்களப்பு ஜெயந்திபுரம் கிராம செயலாளர் பிரிவில் பாலமீன்மடு ஆரம்ப மருத்துவ சிகிச்சை பிரிவு நிலைய வைத்திய அதிகாரி வைத்தியர் தயாளினி மோகனசுந்தரம் தலைமையில் இலவச சிகிச்சை முகாம் இன்று முன்னெடுக்கப்பட்டது .

ஜெயந்திபுரம் கிராம உத்தியோகஸ்தர் மற்றும் ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்ட இலவச மருத்துவ சிகிச்சை முகாமில் 35வயதுக்கு மேற்பட்ட பெருமளவான கிராம மக்கள் கலந்துகொண்டதுடன் சகல நோயாளர்களின் தரவுகள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles