மட்டக்களப்பு மாவட்டத்தில் பிராந்திய சுகாதார பணிமனை ஊடாக கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நான்காம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அரச அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு நான்காம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நான்காம்கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தலைமையில் சுகாதார பிரிவினர் இணைந்து பூஸ்டர் மற்றும் பைசர் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் சுகாதார அமைச்சினால் நாடளாவிய ரீதியில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்குப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.