‘மனித விழுமியங்களுடனான தலைமைத்துவம்’ எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறையொன்று இன்று மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதயஸ்ரீதரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும் அவரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஓய்வு பெற்ற உதவி அரசாங்க அதிபர் நாகலிங்கம் புகேந்திரன் வளவாளராக கலந்து கொண்டார்.
உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.