மினுவாங்கொடை முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்பான பிரதான சந்தேக நபர் அடையாளம்!

0
126

மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலை துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல் துறை தலைமையகம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கொலை துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்இ அவர் தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்இ சந்தேக நபரின் முழுமையான விபரங்களை காவல் துறையினர் அறிவித்துள்ளதுடன்இ அவரைக் கைது செய்ய பொது மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

அதன்படி, இலக்கம் 10, மகிந்தாராம வீதி, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை என்ற முகவரியைச் சேர்ந்த 39 வயதுடைய, ஜயகொடகே சஞ்சீவ தோன சஞ்ஜீவ லக்மால் என்பவரே இவ்வாறு பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
833214292வி என்ற தே.அ.அ இலக்கத்திற்குரிய குறித்த நாபரை ஏதேனும் பகுதிகளில் பார்வையிட்டால், கம்பஹா மாவட்டத்தின் சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகரின் 071 85 91 608 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது கம்பஹா மாவட்ட உதவி காவல் துறை அதிகாரியின் 071 85 91 610 என்ற இலக்கத்திற்கோ அல்லது மினுவாங்கொடை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் 071 85 91 612 என்ற இலக்கத்திற்கோ அறிவிக்குமாறு காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.