கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் பிரபல வர்த்தக நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி இந்த போலி கிரீம் வகைகளை விற்பனை செய்து வந்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவ்வாறான போலி கிரீம் வகைகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் தொடர்பில் முறையிட 1971 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.