30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் பலரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில், பாடசாலை மாணவிகள் பலர், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆசிரியர் ஒருவரும் மாணவர் ஒருவரும், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஐந்து மாணவர்களுக்கு, நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் பலரை தேடி, பொலிசார் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கின்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இணைந்து, பல பாடசாலை மாணவிகளை, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதுடன், பாலியல் சேட்டை புரிந்து, பாலியல் துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த ஆசிரியர், அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்காக நியமிக்கப்பட்டு, ஆசிரியர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வந்த நிலையில், குறித்த ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து, மாணவிகள் பலரின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி, அவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.
இவ்வாறு ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் சிலரும் செய்த செயலை, முல்லைத்தீவு இளைஞர்கள் கண்டறிந்து, ஆசிரியர் மற்றும் மாணவர்களின் தொலைபேசியை எடுத்து பார்வையிட்ட போது, பல மாணவிகளின் நிர்வாணமாக வீடியோக்கள், மாணவிகளின் நிர்வாணமாக புகைப்படங்கள், மாணவிகளுடன் உடலுறவு கொண்ட வீடியோக்கள், குறித்த தொலை பேசியில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
இந்த ஆசிரியர், மாணவர்களை பயன்படுத்தி, மாணவர்களை மாணவிகளோடு காதல் வலையில் விழுத்தி, அவர்கள் ஊடாக, அந்த மாணவிகள் நிர்வாண புகைப்படங்களை பெற்று, ஆசிரியரும், அந்த மாணவிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், இந்த ஆசிரியருடைய தொலைபேசியில் இருந்த ஆவணங்கள், பொலிசாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த விடயம் தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலரை விசாரணைக்கு அழைத்து, பொலிசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, ஒரு மாணவியை, ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால், ஆசிரியர் தலைமறைவாக இருந்த நிலைமையில், குறித்த ஆசிரியரோடு சேர்ந்து, இவ்வாறான திட்டங்களை முன்னெடுத்த, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை, பொலிசார் கைது செய்திருந்தனர்.
சுமார் 17, 18 வயதுடைய இந்த ஆறு மாணவர்களையும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, மாணவர் ஒருவர், எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆசிரியர், இன்று, சட்டத்தரணி ஒருவர் ஊடாக, நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இந்த வேளையில், பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பாக மன்றிலே ஆஜரான சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன், இந்த செயல்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை தெளிவுபடுத்தி, இது ஒரு பாரதூரமான செயற்பாடு எனவும், பல்வேறு மாணவிகளை துஷ்பிரயோகம் மேற்கொண்டதுடன், பல பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அவர்களை அச்சுறுத்தி உள்ளதையும் எடுத்துக்கூறி, இது, பொது மக்களிடையே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது ஒரு சமூகப் பிரச்சினை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சார்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஜனன், குறித்த விசாரணை தொடர்பிலே, ஆசிரியரிடம் இன்னும் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதாகவும், சான்று பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும், மேலதிக தகவல்களை பெற வேண்டிய நிலையிலும், இவருக்கு பிணை வழங்குகின்ற போது, இந்த விசாரணைகளை சரியாக செய்ய முடியாது எனவும், சான்றுப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை பெற்றுக்கொள்வதில், இடர்பாடுகள் உள்ளதை தெரிவித்து, அவருக்கு பிணை விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு வலியுறுத்தினார்.
இந்த சம்பவங்களையும், இந்த சம்பவத்தினுடைய பாரதூர தன்மையையும் நன்கு அவதானித்த முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, குறித்த ஆசிரியரை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles