முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருளுடன் பேருந்தில் பயணித்த நிலையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில், போதைப் பொருளுடன் இளைஞரை கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுவிலிருந்து பேருந்தில் ஸ்பிறிற் எனும் போதைப்பொருளை கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 24 வயதான விசுவமடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர் யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
