நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 652 ஆண்களும் 9 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 21 பேர் பொலிஸ் தடுப்பு காவலிலும் 18 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்களிடமிருந்து 1,256 கிராம் 428 மில்லிகிராம் ஹெரோயின், 434 கிராம் 667 மில்லிகிராம் ஐஸ், 653 கிராம் 688 மில்லிகிராம் கஞ்சா மற்றும் 18,014 கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.