ரோஹிங்கிய அகதிகளை திருப்பியனுப்பும் முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு மட்டக்களப்பில் கவனயீர்ப்பு

0
14

ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில், அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம் தலைமையில் மட்டக்களப்பு நகரில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு நகர் பள்ளிவாயலில் இடம்பெற்ற ஜூம்ஆ தொழுகையை தொடர்ந்து, பள்ளிவாயல் முன்பாக, மாவட்ட விவசாய சம்மேளனத்துடன் இணைந்துஇக் கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. யு.என்.எச்.ஆரின் அகதிகள் பாதுகாப்பு தொடர்பான நடைமுறையை பின்பற்றி ரோஹிங்கிய அகதிகளை திருப்பியனுப்பும் முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.