வவுனியா – வேப்பங்குளத்தில் விபத்து : இருவர் வைத்தியசாலையில்.

0
158

வவுனியா – வேப்பங்குளத்தில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வவுனியா நெளுக்குளத்தில் இருந்து நகரை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், நகரில் இருந்து நெளுக்குளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் வேப்பங்குளம் பகுதியில் நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் தொடர்பான மேலதிக விசாரணை நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.