வான் சாகத்தில் ஈடுபட்ட 2 விமானங்கள் மோதி விபத்து: இரண்டு விமானிகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்

0
87

அமெரிக்காவில் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டதில் விமானிகள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் வைத்து ரெனோ என்ற விமான கண்காட்சி நடைபெற்றது. அப்போது வானில் சாகசம் செய்து காட்டுவதற்காக ஏராளமான விமானங்கள் வானில் வட்டமிட்டன.

இந்நிலையில் T-6 என்ற விமானம் ஒன்று வானில் வட்டமிட்ட மற்றொரு விமானத்தின் மீது மோதியது.இதனால் மோதிக்கொண்ட இரண்டு விமானங்களும் தரையில் வேகமாக விழுந்து நொருங்கியது.விமானம் தரையில் மோதி நொருங்கியது விமானிகள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆனால் உயிரிழந்த விமானிகளின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லைஇது தொடர்பாக பேசிய ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் அதிகாரிகள், விமான கண்காட்சியில் T-6 ரக விமானம் மதியம் 2.15 மணியளவில் மற்றொரு விமானத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தனர்.மேலும் விசாரணை நடந்து வருவதாக குறிபிட்ட அவர்கள், கூடுதலான தகவல் எதையும் வெளியிடவில்லை.