யாழ்ப்பாணம், மானிப்பாய் மடத்தடி வீதியில் வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீசி செல்வதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.
இவ்வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பிளாஸ்ரிக், தகரப் பேணிகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இவ் வீதியிலுள்ள மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை. இதனை பிரதேச சபை திருத்தம் செய்வதும் இல்லை. இது குறித்து பிரதேச சபையின் செயலாளருக்கு தெரியப்படுத்தியபோதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.