வெனிசுலாவில் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை அமுல்படுத்தும் நடவடிக்கைக்கு, அந்த நாட்டு சட்டமியற்றுபவர்கள் அனுமதி அளித்துள்ளனர்.இதன்படி, வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் சைமன் பொலிவர் லிபரேட்டர் சட்டத்தினை நேற்று நிறைவேற்றியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டத்தின்படி, வெனிசுலாவுக்கு எதிரான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை ஆதரிக்கும் அதிகாரிகள் 60 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.வெனிசுலாவில் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை ஊக்குவித்தல், தூண்டுதல், உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு 25 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுமெனக் குறிப்பிடப்படுகிறது.அத்துடன், வெனிசுலாவில் அமெரிக்க பொருளாதாரத் தடைகளை ஆதரிக்கும் ஒளிபரப்பு ஊடகங்களை முடக்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.