வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
தொழிலதிபர் ஈ. எஸ். பி. நாகரத்தின் நிதியுதவியில் இந்த உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
ஈழத்துச் சிதம்பரத்தின் மாணிக்கவாசகர் மடத்தில் சமைக்கப்பட்ட உணவு, பொதிகளாக்கி பிட்டியல முன்பள்ளி, சுவாமி கோவிலடி, கோவளம், பெரியடைப்பு, சுன்னாகம், சிவன்கோவிலடி, மல்லிகையடி போன்ற பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன.
இன்றுடன் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இவ்வாறு உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.