ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளன நிர்வாகக் குழுவை தேர்தலினூடாக நியமிக்குமாறு முன்னாள் நிர்வாகக் குழு விளையாட்டுத்துறை அமைச்சரிடம் வேண்டுகோள்   

0
94

ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் நிர்வாகக் குழு விளையாட்டுத்துறை அமைச்சினால் கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாக சபை உருவாக்கப்பட்டதையடுத்து, சம்மேளனத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பல்வேறு வேண்டுகோள்களை விடுத்துவருகிறது. 

அதன்படி, நிர்வாகக் குழுவினர் தேர்தல் மூலம் சுயாதீனமாக ஒரு திறன்மிக்க நிர்வாகக் குழுவை அமைக்குமாறும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இலங்கையில் கராத்தே விளையாட்டு பிரபலமாகி பல சர்வதேச வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், இதனை மென்மேலும் முன்கொண்டு செல்ல திறன்மிக்க நிர்வாகக்குழு வேண்டும் என்பதை முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் நிர்வாகக் குழு விளையாட்டுத்துறை அமைச்சினால் கடந்த ஜூலை மாதம் 28ஆம் திகதி கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாக சபை அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.