அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்னாண்டோவுடன் பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன், கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்தும், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.