கட்டுநாயக்க விமான நிலையத்தில் சொக்லேட் மற்றும் முறுக்கு பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடியே 75 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் வெளியேற முயன்ற இந்திய பயணி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
33 வயதான இந்திய வர்த்தகரான இவர் தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து தாய் ஏர்வேஸ் TG-307 விமானத்தில் நேற்று இரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, அவரது பயணப் பொதிகளில் இருந்த சொக்லேட் மற்றும் முருக்கு அடங்கிய பெட்டிகளில் 01 கிலோ 900 கிராம் எடையுள்ள “குஷ்” என்ற போதைப்பொருளை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது, இந்திய பயணி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.