27 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

24 மணிநேரத்தில் 1,400 ற்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும், குற்றச் செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 42,248 சந்தேக நபர்களில் 1,468 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சகல பொலிஸ் நிலையங்களிலும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரிகளிடம் கடந்த சனிக்கிழமை கையளித்தார். 

35,505 பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களாகவும், 4,258 சந்தேக நபர்கள் கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்களாகவும் மற்றும் 2,485 நபர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் நடந்த குற்றங்களுக்காக தேடப்பட்டு வருகின்றனர் எனவும் குறித்த பட்டியல் சுட்டிக்காட்டுகிறது.

ஐஜிபியின் உத்தரவுக்கு இணங்க , பிரிவு அதிகாரிகள், மாவட்ட பொறுப்பாளர்கள், தலைமையக ஆய்வாளர்கள் ,அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றப்பிரிவு நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் நேற்றிலிருந்து (14) நடைபெற்று வரும் ‘யுக்திய’ நடவடிக்கையில் தீவிரமாக பங்கேற்றனர்.

அதன்படி, பட்டியலில் இருந்த 1,468 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பட்டியலிலிருந்து கைது செய்யப்பட்டவர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,198 பேரும், கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 4,258 தேடப்படும் சந்தேக நபர்களில் 123 பேரும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் நடந்த குற்றங்களுக்காக 149 சந்தேக நபர்களும் தேடப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles