24.6 C
Colombo
Wednesday, December 4, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

5 வருட காலப் பகுதியில் 25,000 பேர் இராணுவ சேவைக்கு சமூகமளிக்கவில்லை

கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் சுமார் 25,000 பேர்  இராணுவ சேவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், விடுமுறை  பெறாத நிலையிலேயே  அவர்கள் சென்றுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கடந்த காலங்களில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் மக்களைக் கொலை செய்வதற்காக, துப்பாக்கி ஏந்தியவர்களாகவும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகளாகவும் பயன்படுத்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் எதுவித அறிவித்தலுமின்றி சேவைக்கு திரம்பாத இராணுவத்தினர் என்றும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இராணுவத்தினர் மற்றும்  ஏனைய  படையினர் பாதாள உலக குற்றச் செயல்களில்  ஈடுபடுவது மற்றும் அவர்கள் பிரசன்னம் தொடர்பாக இராணுவ பொலிஸார் தற்போது  விழிப்புணர்வு விரிவுரைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles