19 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!

0
129

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி பாடசாலை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 19 அன்று அரசாங்கத்தால் சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாடசாலைகளுக்கும் குறித்த விடுமுறையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அன்றைய தினத்தை விடுமுறை தினமாக கருதி செயற்படுமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.