25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

14 வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்த காதர் மஸ்தான்!

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், இன்று, 14 வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளார்.

வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள், பொது நோக்கு மண்டபங்களின் பகுதி அளவு திருத்த வேலைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் என, பல திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

அந்தவகையில், விசுவமடு பகுதியில், 30 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாத வீதிகளை புனரமைப்பதற்கான பணிகளை, இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது, அமைச்சர், மக்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles