சம்பந்தன் ஐயாவின் மறைவு தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சியின் கொடி அரக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில்,பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் அஞ்சலி பதாகையும் கட்டப்பட்டது.