அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களை கைது செய்து, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
களனி வெளி பெருந்தோட்ட யாகத்திற்குட்பட்ட பீட்ரு தேயிலை தொழிற்சாலைக்குள், கடந்த மே மாதம் 30 ஆம் திகதி, அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட்ட குழுவினர், அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து, தோட்ட நிறுவனத்தினால், நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
அதற்கமைய, இன்று, நுவரெலியா மாவட்ட நீதிமன்றில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான, அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அமைச்சர் சார்ந்தவர்களை, வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகை தரும் படி, நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், இன்றையதினம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வருகை தரவில்லை என்பதால், இது தொடர்பான மேலதிக தகவல்களை, பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்ததை அடுத்து, தகவல்களை பரிசீலனை செய்த நீதிபதி, வழக்கின் பிரதான சந்தேக நபரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏனையவர்களை கைது செய்து, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி, நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.