தொற்றுநோய் கால நீதி மற்றும் சுகாதார உரிமை தொடர்பான மக்கள் ஆணையம் நடாத்திய கொவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி காலத்தில், மக்களின் உரிமைகள் எவ்வாறு கையளாப்பட்டன என்பது தொடர்பான பொது விசாரணை நிகழ்ச்சி நேற்று அம்பாறை அட்டாளைச்சேனையில் நடைபெற்றது.
எல்.எஸ்.றி அமைப்பினால் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இவ் வேலைத்திட்டமானது, அம்பாறை மாவட்ட மட்டத்தில் மனித எழுச்சி அமைப்பின் இயக்குநரான கே. நிஹால் அஹமட்டின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.
சர்வோதய தலைவர் வின்யா ஆரியரட்ன, ஆய்வாளர் சிவஞானம் பிரபாகரன், கலாநிதி உபுல் விக்ரமசிங்க ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டிருந்தனர்.
கொவிட்-19 தொற்று நோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்கள், ஒதுக்கப்பட்ட மற்றும் இலகுவாக பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய மக்களிற்கு சுகாதாரப் பராமரிப்பை அணுகுவதில் உள்ள தாக்கங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
சமூக நீதி மற்றும் சுகாதார சமத்துவத்தை முன்னேற்றக்கூடிய கருத்துள்ள கொள்கை மாற்றங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கல் குறித்தும் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.