நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (27) செவ்வாக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 25,188 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 201,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 23,300 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 186,400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.