மட்டக்களப்பு காத்தான்குடியில், உலாமாக்களுக்கான ஒன்றுகூடல்

0
50

மட்டக்களப்பு காத்தான்குடியில், உலமாக்களுக்கான ஒன்று கூடல் நேற்றிரவு அல்மனார் அறிவியல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் ஒன்று கூடல் நடைபெற்றது. உலமாக்களுக்கான சமகால விவகாரங்கள் தொடர்பாக வெலிகமை அரபுக் கல்லூரியின் அதிபர் அப்துர் ரஹ்மான் ஹாபிஸ் சிறப்புரையாற்றினார்.

அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையின் காத்தான்குடி கிளையின் தலைவர் மௌலவி ஹாரூன் ரஷாதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், செயலாளர் அல்ஹாபிழ் சவாஹிர் பலாஹி காத்தான்குடி பள்ளிவாயில்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அல்ஹாபிழ் இல்ஹாம் பலாஹி உட்பட சிரேஷ்ட மற்றும் இளம் உலமாக்கள் கலந்து கொண்டனர்.