30 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !

குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கேம் சேஞ்சர் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது. தனித்துவமான வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா அட்டகாசமான வசனங்களை வழங்கியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையும், எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை, மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும்.

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், கேம் சேஞ்சர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் சிக்கல்களை பேசும் படமாக உருவாகியுள்ளது. கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல், அழுத்தமான கதையுடன் அட்டகாசமான அனுபவமாக இப்படம் உருவாகியுள்ளது.

கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது, படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் டீசர்கள், போஸ்டர்கள் மற்றும் ஃபிலிம் மேக்கிங் காட்சிகள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். முதல் இரண்டு பாடல்களான ஜருகண்டி மற்றும் ரா மச்சா மச்சா ஆகியவை சார்ட்பஸ்டர்களாக அமைந்தன. ரா மச்சா மச்சா யூடியூப்பில் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது.

நட்சத்திர நடிகர்கள், திறமையான குழுவினர் மற்றும் வசீகரிக்கும் கதைக்களத்துடன், கேம் சேஞ்சர் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறத் தயாராக உள்ளது. படத்தின் ரிலீஸை நோக்கி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சங்கராந்தி பாக்ஸ் ஆபிஸில் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles