வெசாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு வீடு திரும்பிய லொறி விபத்து – 10 பேர் படுகாயம்

0
34

கொழும்பில் வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆனமடுவ நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் மாரவில ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

வெசாக் பண்டிகையில் கலந்து கொள்வதற்காக ஆனமடுவவிலிருந்து கொழும்புக்கு ஒரு சிறிய லொறியில் பயணித்து,இ ஆனமடுவவிற்கு திரும்பிக் கொண்டிருந்த குழுவினரிடையே இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.