28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தந்தைக்கு எச்சரிக்கை?: ”புதுக்கட்சிக்கும் தனது இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை”- விஜய் அறிக்கை

எனது பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தி விளம்பரத்தில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் இன்று தனது அறிக்கையில் எச்சரிகை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் அரசியலுக்கு வரவழைக்க அவரது ரசிகர்கள் அவ்வப்போதும் எதாவது போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள். அப்பது டுவிட்டரில் ஹேஸ்டேக் பதிவிட்டு டிரெண்டிங் செய்வது வாடிக்கையான ஒன்றாகும்.

இந்நிலையில் சமீபத்தில் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஒரு அமைப்பில் இருக்கும் நான் எதற்கு பாஜகவில் இணையவேண்டும் ? என்ற கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் விஜய் கட்சி தொடங்குவதாக தகவல்கள் பரவியது. இன்று விஜய், அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கவேண்டி கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகத் தகவல் அனைத்து மீடியாக்களிலும் வெளியானது.

இதையடுத்து , விஜய் பெயரில் நான் தான் கட்சியைப் பதிவு செய்தேன்…என எஸ்.ஏ,சந்திரசேகர் விளக்கமளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது , நடிகர் விஜய் தனது பிஆர் ஓ மூலம் ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,
இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் ஓர் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். அவர் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என்ற் திட்டவட்டமாக எனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும்
தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles