28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு.வாகரையில் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் குளங்கள் புனரமைப்பு

உலக நீர் தினத்தையொட்டி மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளங்களைப் புனரமைப்புச் செய்யும் கட்டுமானப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்படும் நிகழ்வு வாகரை பாவக்கொடிச்சேனையில் நேற்று பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

‘எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் – பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.’ எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயல்திட்டத்தில் வாகரைப் பிரதேசத்திலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம் ஆகிய மூன்று குளங்கள் சுமார் 6 கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்), கொகாகோலா பவுண்டேஷன், இளைஞர் அபிவிருத்தி அகம் ஆகியவை கூட்டிணைந்து இந்த அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

‘பெண்கள், குழந்தைகள் உட்பட 1,772 வறுமைக்குட்பட்ட குடும்பங்களை இலக்காகக் கொண்டு அவர்களது மேம்பட்ட வாழ்க்கையை உறுதி செய்வதும் 1000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதும் இதன் பிரதான நோக்கங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வீ எபெக்ற் நிறுவனத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் நைனா லர்ரீPயா அதன் இலங்கைக்கான பணிப்பாளர் தேவசிங்கம் மயூரன் கொகாகோலா பவுண்டேஷன் அமைப்பின் இலங்கை மாலைதீவு பிராந்திய இணைப்பாளர் லக்ஷான் மதுரசிங்ஹ மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரன், உட்பட துறைசார் அதிகாரிகள் அரசியல் பிரதிநிதிகள் பொது மக்கள்கலந்து கொண்டனர்.

நிகழ்வில் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் ஆசிய பிராநதிய பணிப்பாளர் நைனா லர்ஷியா கருத்து வெளியிட்டார்.

கிராமப்புற பெண்களின் சமூக மற்றும் பொருளாதார சக்தியை வலுப்படுத்துவதன் மூலமே இந்தச் சாதனையை அடைந்து கொள்ள முடியும்.
அதனால்தான் எங்கள் வளர்ச்சித் திட்டத்தில் பெண்களை மையமாக வைத்துள்ளோம்.பெண்களுக்கு அதிகாரம் அளித்து பெண்களில் முதலீடு செய்வதன் மூலம் உற்பத்தித்திறன், உணவுப் பாதுகாப்பு மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை உருவாக்க முடியும்.பெண்களுக்கு நிலம், கல்வி, பயிற்சி, நிதி சேவைகள் மற்றும் பலம் கிடைக்கும்போது பொருளாதார ரீதியில் முழு சமூகமும் பயனடைகிறது.எங்கள் அனுபவத்தில் நிலையான விவசாயமே மிகவும் பயனுள்ள வழி என்பது தெளிவாகிறது. கிராமப்புறங்களின் மறுமலர்ச்சிக்கு ஆதரவளித்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாம் கூட்டுறவுத்துறையின் அனுசரணையையும் பெற்று வருகின்றோம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles