29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த, 15ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர், இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதல் போட்டியில் இலங்கை அணி முதலில் ஆப்கானிஸ்தான் அணியுடன் களமிறங்குகிறது. இன்று ஆரம்பமாகும் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. டுபாய் மற்றும் சார்ஜா ஆகிய இடங்களில் இதன் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த தொடரில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன. ஹொங்கொங் அணி தகுதி சுற்றுப் போட்டியில் விளையாடி தகுதிபெற்று தொடருக்குள் நுழைந்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles