ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 இலக்குகளால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து இலக்குகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக பானுக ராஜபக்ஷ 38 ஓட்டங்களையும் சமிக கருணாரத்ன 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் பரூகி 3 இலக்குகளையும், முஜீப் ரஹ்மான் மற்றும் நபி ஆகியோர் தலா இவ்விரண்டு இலக்குகள் வீதம் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 106 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குர்பாஸ் மற்றும் ஹஸ்ரதுல்லா ஆகியோரின் அதிரடி காரணமாக 10.1 ஓவர்கள் நிறைவில் 2 இலக்கினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
குர்பாஸ் 40 ஓட்டங்களையும், ஹஸ்ரதுல்லா ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.