இந்தியாவின் மக்களைவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மூன்றாவது முறையும் இந்திய பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்திருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில் இந்திய மக்களுக்காக பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொருளாதார ரீதியில் வலுவான ஒரு நாடாக கட்டியமைத்துள்ளார்.
அதேபோல் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது இந்திய அரசு கடன் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி இலங்கைக்கு கைகொடுத்துள்ளது. மேலும், வாழ்வாதார உதவிகளை வழங்கியுள்ளது.
இன்று இந்தியாவில் 3வது முறையாக ஆட்சி அமைத்து மீண்டும் அதிகாரத்தில் அமர்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
உலகத்தின் வலிமை மிக்க தலைவராகவும் அவர் மாறியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.