24 C
Colombo
Thursday, September 12, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஒரு அரசியல்வாதியின் தகுதியை தீர்மானிப்பது யார்?

சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்த கருத்தொன்று, அவரது தகுதியை, அவரே பரிகசிப்பதாக அமைந்திருந்தது. தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, வடக்கு மகாண முதலமைச்சராவதற்கு தகுதியற்றவர் என்றும் – அவர் தகுதியற்றவர் என்பதால்தான், இரா.சம்பந்தன் தன்னை தெரிவு செய்ததாகவும், விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். விக்கினேஸ்வரனின் மேற்படி அபிப்பிராயம், அவரை தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலேயே விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

பொதுவாக விக்கினேஸ்வரன் முன் கூட்டிய தயாரிப்புக்களுடனேயே நேர்காணல்களை எதிர்கொள்ளுவார். அவருக்கான கேள்வி முன்னரே வழங்கப்பட்டுவிடும். இவ்வாறானதொரு பின்னணியில், மாவை சேனாதிராசா தொடர்பான கேள்வி அவருக்கு முன்னதாகவே வழங்கப்பட்டுவிட்டது. உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் விக்கினேஸ்வரன் இவ்வாறான கேள்விகளை தவிர்த்திருக்க வேண்டும். மாவை பிறிதொரு கட்சியின் தலைவர், அவருடைய தகுதியென்ன என்பது அவரது கட்சிக்குரிய விடயம். அதில் விக்கினேஸ்வரன் அபிப்பிராயம் கூற முற்பட்டிருப்பதானது, அவரது அரசியல் முதிர்ச்சியையே கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றது. மேலும் ஒரு அரசியல்வாதி தகுதியுள்ளவரா அல்லது இல்லையா என்பதை இறுதியில் மக்களே தீர்மானிக்கின்றனர். ஒரு காலத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவர், பின்னர் மக்களால் நிராகரிக்கப்படுவதுமுண்டு. நிராகரிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதுமுண்டு. இந்த இடத்தில் கோப்பட வேண்டுமென்றால், மக்கள் மீதுதான் கோப்பட வேண்டும். மக்களின் தெரிவுகள் தவறானதாக அமைகின்ற போது, அதன் விளைவுகளையும் மக்களே அனுபவிக்கின்றனர்.

விக்கினேஸ்வரனே இதற்கு சிறந்த உதாரணம். 2013இல் வீட்டுச் சின்னத்தில் விக்கினேஸ்வரன் பெற்ற வாக்குகளை தனிக்கட்சியில், அவரால் பெற முடிந்ததா? 2013 தேர்தலில் 132000 விருப்பு வாக்குகளை விக்கினேஸ்வரன் பெற்றிருந்தார், ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 21000 வாக்குகளையே அவரால் பெறமுடிந்திருக்கின்றது. அவ்வாறாயின் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட யாழ் மக்களால் விக்கினேஸ்வரன் நிராகரிக்கப்பட்டிருக்கின்றார். இந்த விபரங்களின் அடிப்படையில் விக்கினேஸ்வரனின் தகுதி தொடர்பில் ஒருவர் கேள்வி எழுப்பலாமல்லவா!

உண்மையில் விக்கினேஸ்வரன் தொடர்பில் ஆரம்பத்தில் பலரிடமும் ஒரு மதிப்பிருந்தது. அவர் மாகாண சபையை கையாண்ட விதம் தொடர்பில் விமர்சனங்கள் இருந்த போதிலும் கூட, பலரும் விக்கினேஸ்ரன் போன்ற ஒருவர் நாடாளுமன்றம் செல்வது காலத்தின் தேவையென்றே கருதினர். தமிழின் முன்னணி ஊடகவியலாளர்கள், கருத்தியலாளர்கள் பலரும் விக்கினேஸ்வரனுக்கு தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர். இவ்வாறான ஆதரவினால்தான் விக்கினேஸ்வரனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெறவும் முடிந்தது. விக்கினேஸ்வரனின் அவரது, தனித்திறமையினால் வெற்றிபெறவில்லை, மாறாக, பலரும் அவருக்கு வழங்கிய ஆதரவினால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. இது தொடர்பில் விக்கினேஸ்வரன் நன்றியுனர்வுடன் இருக்கின்றாரா? கடந்த தேர்தலில், விக்கினேஸ்வரன் அரும்பொட்டில் தப்பியிருந்தார். உண்மையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் விக்கினேஸ்வரன் தனது தகுதி, தனது கட்சியின் தகுதி, தன்னுடன் கூட்டுச் சேர்ந்திருப்பவர்களின் தகுதி, ஆகியவற்றை பற்றியே சிந்தித்திருக்க வேண்டும். அடுத்த கட்டமாக தான் எதனை நோக்கி பயணிக்கப் போகின்றேன் என்பதை தீர்மானித்திருக்க வேண்டும் – ஆனால், விக்கினேஸ்வரனோ மற்றவர்களின் தகுதி தொடர்பில் விவாதித்துக் கொண்டிருக்கின்றார். துறவி வேலனை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பரிந்துரைக்கின்றார். மாவை சேனாதிசாராவை தகுதியற்றவர் என்று கூறும் விக்கினேஸ்வரன், காவிதரித்திருக்கும் துறவி ஒருவரை தகுதியுள்ளவர் என்கின்றார். உண்மையில் இங்கு கேள்விக்குள்ளாகியிருப்பது விக்கினேஸ்வரனின் தகுதி மட்டுமே!

விக்கினேஸ்வரன் கூறியிருப்பதில் ஒரு விடயம் உண்மைதான். 2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் விக்கினேஸ்வரன் அதிக தகுதியுள்ளவர் என்னுமடிப்படையில்தான், சம்பந்தரால் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அப்போது தமிழரசு கட்சியிலுள்ள 99 விகிதமானவர்கள் மாவை சேனாதிசாராவையே தகுதியுள்ளவராக கருதியிருந்தனர். மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்குமாறு, தமிழரசு கட்சியின் ஒவ்வொரு மாவட்ட கிளைகளிலிருந்தும் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையிலிருந்து கூட, மாவைக்கு ஆதரவாகவே கையுயர்ந்தது. ஆனால் சம்பந்தனும் சுமந்திரனும்தான் விக்கினேஸ்வரனை தகுதியுள்ளவராக கண்டனர். அவருக்காக வாதிட்டனர். பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் எவருமே ஆரம்பத்தில் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவாக இருந்திருக்கவில்லை. விக்கினேஸ்வரன் இவ்வாறானதொரு பதவிக்கு தகுதியற்றவர் என்றே அனைவரும் கருதினர். அனைவருமே மாவைக்கே ஆதரவளித்தனர். ஆனால் மாவையோ, சம்பந்தனது வாத்தையாலங்களுக்குள் கட்டுண்டு கிடந்தார். அந்த நேரத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் சுவார்சியமாக கூறினார் – நாங்கள் எல்லோரும் மாவை அண்ணனுக்கு ஆதரவாக இருக்கின்றோம் ஆனால், மாவை அண்ணன் அவருக்கு ஆதரவாக இல்லையே!

உண்மையில் அன்று மாவை சேனாதிராசா உறுதியாக இருந்திருந்தால், சம்பந்தனால் ஒரு கட்டத்திற்கு மேல் நகர முடியாமல் போயிருக்கும். ஆனால் மாவையோ, சம்பந்தனின், ‘சர்வதேசம்’ என்னும் ஒரு சொல்லுக்கு முன்னால் தடுமாறிப் போனார். விக்கினேஸ்வரனை ஏன் தெரிவு செய்தீர்களென்னும் கேள்விக்கு – அப்போது, சம்பந்தன் ஒரு சில சொற்களை மீண்டும், மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தார். அதாவது, சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவர் எங்களுக்குத் தேவை. உல வங்கியோடு பேச வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தோடு பேச வேண்டும். இறுதியில் விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் ஒன்றாக அமர்ந்து கதைப்பதே பெரும் பிரச்சினையானது.

நான் ஏற்கனவே கூறியது போன்று, சம்பந்தன் வார்த்தை யாலங்களால் முன்னால் இருப்பவர்களை தடுமாறச் செய்யக் கூடிய ஒருவர். இதற்காக, அவரது வயதையும் அவர் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வார். தமிழ்ச் சூழலில் ஒரு பொதுவான வழக்கமுண்டு, கருத்தை கூறுபவர் வயதானவர் என்றால், அவரை மறுதலிக்கும் வகையில் பேசக் கூடாது. அது சரியல்ல – என்ன இருந்தாலும் அவரின் வயதுக்கு ஒரு மதிப்பை கொடுக்கத்தானே வேண்டும். இதனை சம்பந்தன் மிகவும் கச்சிதமாக பயன்படுத்திக் கொள்வார். ஆனால் இவ்வாறான புரிதல் மேற்குலகில் இல்லை. அங்கு ஒருவரின் கருத்துத்தான் நோக்கப்படுமேயன்றி, அவரின் வயதல்ல. ஏனெனில் வயதானவர் என்பதால், ஒருவரது பிழையான கருத்தை ஏற்றுக்கொண்டால், நாடு சீரழிந்துவிடும் என்னும் நோக்கிலேயே அங்குள்ளவர்கள் சிந்திப்பார்கள். சம்பந்தன் தனது வார்த்தையாலங்களால் மாவை சேனாதிராசாவையும், ஏனையோரையும் விழச் செய்து, விக்கினேஸ்வரனை முதல்வராக்கியதற்கு பின்னால் – விக்கினேஸ்வரன் தகுதியுள்ளவர்கள் என்று கருதியதுமட்டும்தான் காரணமா? உண்மையில் சம்பந்தன் கருதிய அந்தத் தகுதி என்ன?

சம்பந்தன் அடிப்படையில் மேட்டுக்குடி மனோபாவமுள்ள ஒருவர். அவர் உண்மையிலேயே மேட்குடிதான என்பது வேறு விடயம். ஆனால் அவர் நிச்சயமாக மேட்டுக்குடி மனோபாவத்தை கொண்டாடும் ஒருவர். ஆங்கிலம் தெரிந்தவர்களை அறிவாளிகளென போற்றும் மனோபாவமுள்ள ஒருவர். இந்த பின்புலத்தில்தான் ஒருவரது தகுதியை அவர் மதிப்பிடுகின்றார். இந்த அடிப்படையில்தான் எம்.ஏ.சுமந்திரனை அவர் அரசியலுக்குள் கொண்டு வந்தாhர். இந்த அடிப்படையில்தான் பின்னர் விக்கினேஸ்வரனை அரசியலுக்குள் கொண்டுவந்தார். சம்பந்தன், விக்கினேஸ்வரன், சுமந்திரன் அணி என்பதுதான், அவரது உண்மையான இலக்காக இருந்தது. ஆனால் பொதுவாக மேட்டுக் குடி, மனோபாவத்தில் திழைத்திருப்பவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தங்களை முதன்மைப்படுத்த முற்படுவர். மற்றவர்கள் யார் எனக்கு புத்தியுரைப்பதற்கு, என்னுமடிப்படையில் சிந்திக்க முற்படுவர். சம்பந்தன் தனது வழிகாட்டலில் விக்கினேஸ்வரன் இயங்க வேண்டுமென்று எண்ணினார் ஆனால், விக்கினேஸ்வரனோ இவர் யார் எனக்கு கூறுவதற்கு என்று சிந்தித்தார். இந்த மேட்டுக் குடி மனோபாவத்தில் சம்பந்தன், விக்கினேஸ்வரன், சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில், எந்தவொரு வேறுபாடும் இல்லை. கருத்து ரீதியில் இவர்கள் முரண்படுவதாக தெரிந்தாலும் கூட. இவர்கள் அனைவருமே இயல்பில் ஒரே வகைத்தானவர்களே! தாங்கள் மேலானவர்கள் என்னும் புரிதல் இவர்களிடம் இயல்பாகவே உண்டு. இதில் – யார் அதிகம் மேலானவர்கள் என்பதுதான் இவர்களுக்கிடையிலான பிரச்சினை. இவர்களை விமர்சிப்பவர்களை, இவர்கள் எதிரிகளாகவே பார்க்க முற்படுவர். இது, மேற்படி மேட்டு;குடி மனோபாவத்திலிருந்து எழும் ஒன்றுதான். ஆனால் தாரளவாத சிந்தனையை போற்றுபவர்கள் விமர்சனங்களை புன்னகைத்துக் கொண்டே எதிர்கொள்ளுவர்.

விக்கினேஸ்வரனை அரசியலுக்குள் கொண்டுவந்ததற்கு பின்னால் சம்பந்தனை பொறுத்தவரையில் ஒரு தெளிவான திட்டமிருந்திருக்க வேண்டும். அதவாது, முதலில் விக்கினேஸ்வரனை வடக்கு முதலமைச்சராக்கிவிட்டு, தனக்கு பின்னால் அவரை கூட்டமைப்பின் தலைவராக்குவது. விக்கினேஸ்வரன், சம்பந்தனுடன் ஒத்துழைத்திருந்தால் நிச்சயம் அதுவே நடந்திருக்கும். ஒரு வேளை விக்கினேஸ்வரனும் சம்பந்தனும் ஓரணியில் நின்றிருந்தால், கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் அனைவரும் மிகவும் கச்சிதமாக வெளியேற்றப்பட்டிருப்பர். இந்த இடத்தில் சம்பந்தனுக்கு பெரிய ஏமாற்றம்தான். இவ்வாறானதொரு அரசியல் பின்புலத்தில்தான் இன்று விக்கினேஸ்வரன் ஒரு பக்கமாகவும், சம்பந்தன் இன்னொரு பக்கமாகவும் நிற்கின்றனர்.

ஆனால் பொதுவாக தமிழர்களின் நிலையை அவதானித்தால் – இதில் தகுதி தொடர்பில் விவாதிப்பதற்கு எதுவுமில்லை. ஏனெனில் 70 வருடங்களுக்கு மேல் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் கூட, தமிழ் அரசியலால், மாகாண சபைiயை தாண்டிச் செல்ல முடியவில்லை. அவ்வாறாயின் தமிழ் அரசியல்வாதிகளின் தகுதி தொடர்பில் விவாதிக்க என்ன இருக்கின்றது? இன்று பலரும் மாகாண சபையின் முதலமைச்சருக்கான தகுதி தொடர்பில் விவாதிக்க முற்படுகின்றார்கள் – அங்கு எவ்வகையான ஆற்றல் கொண்டவர்கள் தேவை – வெளியிலிருந்து எவரையெல்லாம் இறக்குமதி செய்யலாம் – என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால் மாகாண சபை எப்படி வந்தது – யாரால் வந்தது என்பதை எவருமே எண்ணிப்பார்;க்கவில்லை. அன்று மாகாண சபையை தீண்டினால், துப்பாக்கி குண்டென்னும் நிலைமையிருந்தது. அவ்வாறானதொரு சூழலில், அரசாங்கத்தின் நெருக்கடிகளுக்கும் விடுதலைப் புலிகளின் துப்பாக்கி வேட்டுக்களுக்கும் மத்தியில்தான் மாகாண சபை மலர்ந்தது.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில், அன்று, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) மகாண சபைத் தேர்தலில் போட்டியிடாதிருந்திருந்தால், இன்று மாகாண சபையென்று ஒன்று இருந்திருக்காது. அப்போதிருந்த இலங்கைக்கான இந்திய தூதுவர், டிக்சித்துடன் எத்தனை சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தன? என்ன பேசப்பட்டன – என்பதை தெரிந்த சுரேஸ்பிரேமச்சந்திரனின் (சட்டரீதியில்) ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சார்பில்தான் – இன்று, விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். இந்த பின்புலத்தில் நோக்கினால், வடக்கு மாகாண முதலமைச்சர் கதிரைக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் எல்லோரையும்விடவும் தகுதியானவராக இருப்பார். மாவை சேனாதிராசாவை அனைவருமே ஏற்றுக்கொண்டால் அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சராக வருபவர் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒருவராக மட்டும்தான் இருக்க வேண்டுமென்பதல்ல, அவர் புளொட்டை அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம், டெலோவை சேர்ந்தவராக இருக்கலாம். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.

இந்த விடயத்தில் தூர நோக்கான பார்வை அவசியம். வெறும் நிர்வாக திறன் மட்டும் மாகாண சபைiயை நிர்வகிக்கப் போதாது. ஏனெனில் அது வெறும் நிர்வாகத்திற்குரிய இடம் மட்டுமல்ல. அதிகாரப்பகிர்வின் அடித்தளமாகவும் மாகாண சபையே இருக்கின்றது – இருக்கப் போகின்றது. மாகாண சபையில் இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தும் அதே வேளை, அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்த மறுப்பதற்கு எதிராகவும் போராட வேண்டிய இடமாகவும் மாகாண சபையே இருக்கின்றது. அதற்கேற்றவாறானவர்களே அங்கு பதவிகளில் அமர வேண்டும். நிர்வாகமும் தெரிய வேண்டும், அரசியல் நெளிவு சுளிவுகளும் தெரிய வேண்டும். அவ்வாறானவர்களை இருக்கின்ற கட்சிகளுக்குள் தேடுவதே புத்திசாதுர்யமானது. அதுவே சரியானதும் கூட.

யதீந்திரா

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles