கல்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவினால் சிறியமற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான வியாபார ஆலோசணையும், வழிகாட்டலும் கொண்ட ஒருநாள் பயிற்சி செயலமர்வு கல்முனை வடக்கு பிரதேச சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் வி.சிறிநாதன் தலைமையில் பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் பிரதான வளவாளர்களாக கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.கோகுலராஜன் கலந்துகொண்டு சமுர்த்திப் பயனாளிகளுக்கான தொழில் அபிவிருத்தி தொடர்பான பயிற்சிகளை வழங்கியிருந்தார்.
மேலும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப்பிரிவு உத்தியோகத்தர்களான எம்.ஐ.றமீஸ்,எல்.துசாந்தன்,ஆர்.நிறோஜினி,எஸ்.யதாஷ்சினி,வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.மோகனதாஸ்,கே.காமிலா, எஸ்.சோபனா,எஸ்.சாஹீர் ஆகியோரும் பயனாளிகளுக்கான தொழில் வழிகாட்டல்களை வழங்கியிருந்தனர்.
கல்முனை வடக்கில் 434 இற்கும் மேற்பட்டசமுர்த்திப்பயனாளிகள் வீட்டுமனைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இவ் வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.