25 C
Colombo
Sunday, November 24, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறிவிப்பு

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை உள்ளிடும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவித்தலொன்றை வெளியிட்டு பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பாராளுமன்ற இணையதளத்தின் (www.parliment.lk) முகப்பு பக்கத்தில் உள்ள தகவல் இணைப்பில் நுழைந்து உரிய தகவல்களை பூர்த்தி செய்யுமாறு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறனர். தகவல்களை வழங்குவதற்கான மாற்று வழியாக இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய படிவத்தை நிரப்பி வழங்க முடியுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக ‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்’ 2024 நவம்பர் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மற்றும் 20 ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் செயல்படும். அனைத்து கௌரவ உறுப்பினர்களுக்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுத்தல் மற்றும் இலத்திரனியல் வாக்களிப்பு நோக்கத்திற்காக கைரேகைகளை பெறுதல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இதில் கலந்துகொள்ளுமாறு கௌரவ உறுப்பினர்களை அன்புடன் கேட்டுக் கொள்வதாக செயலாளர் நாயகம் தனது அறிவிப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பான முழுமையான அறிவித்தல் வருமாறு

பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் விசேட அறிவித்தல்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதலாவது கூட்டத்தை நடத்துவதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களையும் பெறுவதற்கு பாராளுமன்ற இணையதளம் வழியாக உரிய தகவல்களை உள்ளிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க பாராளுமன்ற இணையதளத்தின்(www.parliment.lk) முகப்பு பக்கத்தில் உள்ள தகவல் இணைப்பில் நுழைந்து உரியதகவல்களை பூர்த்திசெய்யுமாறு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தகவல்களை வழங்குவதற்கான மாற்று வழியாக இந்த இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய படிவத்தை நிரப்பி வழங்குவதும் செய்யப்படலாம்.

மேலும் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக ‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தகவல் கருமபீடம்’ 2024 நவம்பர் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மற்றும் 20 ஆம் திகதி புதன்கிழமை ஆகிய தினங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் செயல்படும். அனைத்து கௌரவ உறுப்பினர்களுக்கும் தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குதல் பாராளுமன்ற உறுப்பினர்களின் அடையாள அட்டைக்கான புகைப்படங்களை எடுத்தல் மற்றும் இலத்திரனியல் வாக்களிப்பு நோக்கத்திற்காக கைரேகைகளை பெறுதல் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் இதில் கலந்துகொள்ளுமாறு கௌரவ உறுப்பினர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல் கருமபீடத்திற்கு வருகை தரும்போது சாரதியை மட்டும் அழைத்து வரலாம் மேலும் தகவல் கருமபீடத்தில் கௌரவ உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். பாராளுமன்றத்திற்குள் நுழைவதை எளிதாக்க தங்களது தேசிய அடையாள அட்டை செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதிப்பத்திரத்தை கொண்டுவருமாறும் பாராளுமன்ற வளாகத்தினுள் நுழையும்போது உறுப்பினர் நுழைவாயிலை பயன்படுத்துமாறும் கௌரவ உறுப்பினர்கள் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பின்வரும் அவசர தொலைபேசி இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம்:

தகவல் உதவி: 0112777273 / 0718219994 / 0112777524 / 0714410073
தொழில்நுட்ப உதவி: 0112777563 / 0715352701 / 0707415415 (உடனடி அழைப்புகள்)

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles