காலநிலை சீரடைந்து வரும் நிலையில், மட்டக்களப்பில் தைப்பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ள அனர்த்தத்திற்குள்ளானது.
வற் வரி அதிகரிப்பு போன்றவைகளால் மக்கள் பொருளாதார ரீதியிலும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில்,
பிறக்கவிருக்கும் தைத்திருநாளை வரவேற்பதற்காக, பொருட்களைக் கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகர பொதுச்சந்தை, களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தை, ஆரையம்பதி பொதுச்சந்தை, கொக்கட்டிச்சோலை ஆகிய
பகுதிகளிலும் தைப்பொங்கல் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
அடை மழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு மத்தியில், தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற நம்பிக்கையோடு, தைத்திருநாளைக் கொண்டாட அம்பாறை
மாவட்டமும் தயாராகி வருகிறது.
கடந்த காலங்களோடு ஒப்புடுகையில், இம்முறை பொருட் கொள்வனவில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்திலும் தைப்பொங்கலை கொண்டாட அங்குள்ள சிறுவர்கள் தயராகிவருவதை அவதானிக்கமுடிந்தது.
வெள்ளப்பெருக்கால் அவதியுற்று கஸ்ட நிலையில் வாழும் மக்களும் தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக, பல்வேறு அமைக்களும் இணைந்து
உலருணவுப் பொதிகளை வழங்கி வருகின்றன.
ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் வி.பபாகரன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முகாங்களில் தங்கியுள்ள மக்களை நேரில் பார்வையிட்டதுடன் அரசாங்கத்தின் உதவியினை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்தார்.