மட்டக்களப்பில் பாடசாலைமாணவிகளுக்கெனபிரத்தியே பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்!

0
22

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு சாலையால், மாணவிகளுக்கான பிரத்தியேக பேருந்து சேவை இன்றைய தினம் சத்துருக்கொண்டானில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவிகள் பயணங்களின் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில், அருவி பெண்கள் வலையமைப்பால் முன்வைக்கப்பட்ட, கோரிக்கைக்கு அமைய, கல்முனை தலைமை காரியாலய பிரதான பிராந்திய முகாமையாளர் விஜித்த தர்மசேனவின் அனுமதிக்கு அமைய, மட்டக்களப்பு
சாலை முகாமையாளர் கந்தசாமி ஸ்ரீதரனால், இச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேருந்து சேவையின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 6.15 மணியளவில், மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில், மட்டக்களப்பு சாலை முகாமையாளர் மற்றும் அருவி பெண்கள் வலையமைப்பின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மாணவிகளுக்கான பிரத்தியேக பேருந்து சேவையானது, ஊறணி சரஸ்வதி வித்தியாலயம் மட்டக்களப்பு அருணோதயா வித்தியாலயம், தாண்டவன்வெளி புனித ஜோசப்வாஸ் வித்தியாலயம், மட்டக்களப்பு இந்து கல்லூரி, கோட்ட முனை கனிஷ்ட வித்தியாலயம், மட்டக்களப்பு மகாஜன கல்லூரி, புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை , ஆணைப்பந்தி இந்து மகளிர் கல்லூரி, வின்சென்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலை போன்ற பாடசாலைகளை அண்மித்த பிரதான வீதிகள் ஊடாக
மட்டக்களப்பு பேருந்து தரிப்பிடத்தை வந்தடையும் வகையில், பேருந்தின் வழித்தடம் அமைந்துள்ளது.

இதைப்போன்றே, மட்டக்களப்பில் மகளிருக்கான விசேட பேருந்து சேவையொன்றையும் எதிர்காலத்தில் ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என இ.போ.ச மட்டக்களப்பு சாலை முகாமையாளர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.