மட்டக்களப்பு மாவட்ட மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டம், மாவட்ட காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சனி முகுந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் என்பன சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக, இந் நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. 16 பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட மாணவ தலைவர்களுக்கும் பொறுப்பாசிரியர்களுக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினரினால் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
பாடசாலை மாணவ தலைவர்களுக்கு சிறுவர் உரிமைகள் தொடர்பான அறிவினை வழங்கி, அவர்களை வலுவூட்டி, அவர்கள் மூலம் பாடசாலைகளில் சிறுவர்
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான ஓர் செயற்றிட்டமாக இந் நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தேசிய சிறுவர் பாதுகாப் அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்களான திருமதி நிஷா ரியாஸ், த.பிரபாகர் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்
என பலரும் கலந்து கொண்டனர்.