மாத்தறை – திஸ்ஸ வீதியில் விபத்து ; இருவர் படுகாயம்!

0
27

மாத்தறை – திஸ்ஸ வீதியில் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது ஒரு டிப்பர் வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.